“எல்லா வகையான விஷயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. சரவாக்கின் மழைக் காடுகள் துப்புரவு செய்யப்படுவது பற்றியும் காடுகள் ஏதுமில்லை என்றும் பேசப்பட்டுள்ளது.” “ஆனாம் அவை உண்மை அல்ல என்பது நமக்குத் தெரியும். பிஎன் (BN) என்ன செய்தாலும் அது தவறாகும். அன்வார் மட்டுமே சரியானதைச் செய்கிறார்,” என அவர் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் நடைமுறைகள்
Global Witness இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. வெட்டுமர அனுமதிகள் வழங்கப்படுவதில் காணப்படும் ஊழல் நடைமுறைகளை அவை தாயிப் குடும்பத்துடன் தொடர்புபடுத்துகின்றது.அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தாயிப், வீடியோவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தமக்கு நல்ல உறவுகள் இல்லை என்றார். பெத்ரா ஜெயாவில் உள்ள கம்போங் லிந்தாங்கில் ஆயிரம் கிராம மக்களிடம் உரையாற்றிய தாயிப் 25 நிமிடங்களுக்கு அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துப் பேசினார்.
சரவாக் மக்களை காப்பாற்ற வேண்டும் என அன்வார் உண்மையில் விரும்பினால் அனைத்துலக அரங்கில் நடத்தப்படும் “பொய்ப் பிரச்சாரத்திலிருந்து” சரவாக்கைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.“உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் அன்வாருக்கு அறிவுரை கூறுகிறேன்.” “அவர் அதனைச் செய்தால் இந்த மாநில மக்களுக்கு அவர் உண்மையில் போராடுவதாக நம்ப முடியும்,” என்றும் தாயிப் சொன்னார்.
No comments:
Post a Comment