21/03/2013

தேசிய உருமாற்றுத் திட்டத்தின் ஆண்டறிக்கை நேற்று பிரதமர் வெளியீடு


கோலாலம்பூர், 20 மார்ச் 2013.

2012 ஆம் ஆண்டிற்கான தேசிய உருமாற்றுத் திட்டத்தின் ஆண்டறிக்கையை நேற்று இரவு பிரதமர் நஜிப் துன் ரசாக் வெளியிட்டார்.


அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்த சிறப்பு அம்சங்கள்  பின்வருமாறு:-


  • 2012 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலான அரசாங்க  மற்றும் பொருளாதார உருமாற்றுத் திட்டங்களின் இலக்குகளை  அடைந்துவிட்டோம்.
  • 6 மில்லியன் மக்கள் பயனடையும் வகையில், ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் RM2.34 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 5.24 மில்லியன் மாணவர்களுக்கும் மேல் பயனடையும் வகையில், ஒரே மலேசியா கல்வி உதவித் தொகையின் கீழ் மொத்தம் RM524 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 390,000 க்கும் மேல் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், ஒரே மலேசியா புத்தக உதவித் திட்டத்தின் கீழ் RM97.5 மில்லியனுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்த தனிநபர் தேசிய வருமானம் வருமானம் 1957 ஆம் ஆண்டு US$257 (RM803) ஆக இருந்து 2012 ஆம் ஆண்டில் US$9,970 (RM18,725) ஆக உயர்ந்துள்ளது.
  • மலேசியாவில் மக்களின் சராசரி மாத வீட்டு வருமானம் 2009 ஆம் ஆண்டு RM4,025 ஆக இருந்து 2012 ஆம் ஆண்டில் RM5,000 ஆக உயர்ந்துள்ளது.
  • சுதந்திரத்திற்கு முன்னர் 60 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த வறுமை விகிதம், தற்போது  2012 ஆம் ஆண்டில் 1.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • தேசியப் பணவீக்கம் டிசம்பர் 2012 ஆண்டு வரை 1.2 சதவிகிதமாக குறைந்த அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • மக்கள் அன்றாட வாழ்க்கை செலவுகளைச் சமாளிக்கும் வகையில் கொடுக்கப்படும் மானியங்களுக்கு, RM37.8 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ‘இ காசே’ திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100,000 மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.
  • அரசாங்கத்தால் 100,000 மேற்பட்ட  மலிவு விலை வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • NKRA திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 4 மில்லியன் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் குற்ற விகிதம் 27 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தேசிய முன்னணி அரசின் பல்வேறு சாதனைத் திட்டங்களின் அம்சங்கள் நஜிப் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

No comments:

Post a Comment