23/03/2013

அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா? மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை யார் மேற்கொள்வது? அது பிரதமரின் பொறுப்பா அல்லது நாட்டு மக்களின் பொறுப்பா?

       இன அடிப்படையிலான தீர்வுகளை மேரற்கொல்லும் மக்கள் கூட்டணியின்  பெக்கினால், இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது.ஆனால், 2008ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நஜீப் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்லின மக்களை ஒன்றிணைக்கும் செயல் வடிவத்தை கொண்டதாகும். அவை அம்னோவின் ஆதரவோடு உண்டான நிரந்தர தீர்வாகும். இதற்கிடையில், கடந்த 5 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 1,000 பாஸ் ஆதரவாளர்கள்  தங்கள்கட்சியின் மீதிருந்தநம்பிக்கையை  இழந்து அம்னோவுடன் இணைந்துள்ளனர். தங்களின் ஆதரவாளர்களின் நம்பிகையையே இல்லாத இவ்வர்களா நம் நம்பிகையை பெற பொகிறார்கள்? 

      அதுமட்டுமா, நமது நாட்டு மக்களின் நலனை விட தன்னுடைய சுய அரசியல் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அன்வார் நேரத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி மாற்றி பேசுபவர் என்பது நம் அனைவரும் அறியாததா....  மக்கள் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கை மாற்றி அமைக்கப்படும் என்று அவர் கூறியதே இதற்கு  சரியான சான்று. மக்கள் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அன்வார் கூறிய பதில் இந்தியர்கள் தேசிய நீரோடையில் இணைக்கப்படுவார்கள்,இனவாரியாக பிரித்து பார்க்காமல் ஏழை பணக்காரர் என்ற முறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இந்திய  சமுதாயத்துக்காக திட்டங்கள் எதுவும் இல்லை என்று பலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து   இன்று இந்தியர்களின் நலனுக்காக   தேர்தல் கொள்கை அறிக்கை மாற்றி அமைக்கப்படும் என்றும் இந்தியர் நலன்கள் புறக்கணிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். இவரின்  இந்த நிலை  நேரத்திற்கு தகுந்தாற் போல்  மாற்றிப்பேசும் இவருடைய அரசியல் சூழ்ச்சியை காட்டுவதாக தெரிகிறது.
       அனால்,நமது பிரதமர் நஜீப்  நிலையானவர் அவருடைய கொள்கையில் இருந்து பின்வாங்கியது கிடையாதுஇந்திய சமுதாய மக்களுக்கு உதவுவதை பெர்க்காசா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த  நிலையிலும் கூட அவர் 1 மலேசியா கோட்பாட்டில் அனைத்து இனங்களின் முன்னேற்றத்திலும் முனைப்பு காட்டப்படும் என்று உறுதியாக இருந்தார் இதனை இந்திய சமுதாய மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் இந்தியர்களின் மன நிலையை புரிந்து கொண்டு  இந்தியர் நலன்களில் முனைப்பு காட்டி 2009 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்ற நாள் முதல் பல பொருளாதார உருமாற்றுத்திட்டங்களை அறிமுகப்படுத்தி ,அதனை செயல் வடிவில் செய்து காட்டி வருகிறார்.

     
அன்வாரின்  மன நிலை ஒரு குறி சொல்பவனை போல புத்ரஜெயாவை கைப்பற்றுவோம் என்றும் பல இடங்களில் பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.அவர்களின் கூட்டணி கொள்கையிலும் ஒற்றுமை இல்லை.யார் பிரதமர்,யார் துணைப்பிரதமர்,பி.கே.ஆர், பாஸ்,மற்றும் டி.ஏ.பி.கட்சிகளுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் கொடுக்க போகிறார்கள்இதில் இந்தியத்தலைவர்களின்  நிலைப்பாடு என்ன என்பதனை இவர்களால் முடிவு செய்ய  முடியுமா?

    முடிவு நம் கையில்.... வருகின்ற பொதுத்தேர்தலில் நஜீப்   அவர்களின் தலைமைத்துவத்துக்கு ஆதரவு கொடுத்து, இந்திய சமுதாயத்துக்கு  அவர் உழைத்த உழைப்பின் பலனை எதிரொலிப்பொம்.......

No comments:

Post a Comment