22/03/2013

13 ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெல்வது உறுதி- ஸ்ரீ முஹிடின் யாசின்
புத்ரா ஜெயா, 19 மார்ச் 2013.
எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், பிரதமர் நஜிப் தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியடைந்து, மீண்டும் ஆட்சியில் அமரும் என்று  துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.


புத்ரா ஜெயாவில் கூட்டரசுப்பிரதேசத்தின் சார்பாக நடைபெற்ற 13 தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முஹிடின் யாசின் 
கடந்த 12 ஆவது பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததால், இம்முறை தேசிய முன்னணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் யாவும், கடுமையான சவால்களைச் சந்திக்கும் வகையில்  தங்களை தயார்படுத்தி வருவதாகவும்,
மேலும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, கடந்த தேர்தலில் எதிர்கட்சிகளிடம் இழந்த மாநிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி கூறுகையில்,
“இதுவரை தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் எதிர்கால நலன் கருதி செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அனைத்தும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் தேவையான மாற்றங்களை செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தேசிய முன்னணி மற்றும் அம்னோ கட்சியிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு எதிர்கட்சிகளை வீழ்த்த வேண்டும். மிக முக்கியமாக, அனைத்து தொகுதித் தலைவர்களும் பிரதமர் நஜிப் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதனால் தேர்தல் நேரத்தில் உருவாகும் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்” என்றார்.No comments:

Post a Comment