31/03/2013

சுல்கிப்ளி விமர்சனத்தால் ம.இ.கா.தலைவர்கள் கொந்தளிப்பு!


கோலாலம்பூர், மார்ச் 30-  டத்தோ சுல்கிப்ளி நோர்டின் (படம்) தனது  அரை வேக்காடான விமர்சனத்தை உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதோடு,  மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று முக்கிய ம.இ.கா. தலைவர்கள் சுல்கிப்ளிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து சமயம் குறித்து சுல்கிப்ளி வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக நாடு எங்கும் கடுமையான எதிர்ப்பு அலைகள் அரசியல், சமூகத் தலைவர்களிடம் இருந்து புறப்பட்டு வரத் தொடங்கியுள்ளன.
கங்கை நீர் புனிதமா? இல்லையா? என்பதை இந்து பெருமக்கள் அறிந்து கொண்டால் மட்டும் போதும். அது குறித்து விமர்சனம் வழங்கும் தகுதி சுல்கிப்ளிக்கு கிடையாது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவர் அரைவேடாக இருப்பதால் தான் இவ்வாறு விமர்சனம் செய்து வருகிறார். அவர் படித்தவராகவோ அல்லது ஒரு உண்மையான முஸ்லிமாகவோ இருந்திருந்தால் இவ்வாறு விமர்சனம் செய்ய மாட்டார். காரணம் உண்மையான முஸ்லிம் அன்பர்கள் அடுத்த மதத்தை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதலால் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டத்தோ எஸ்.கே.தேவமணி, பி.கமலநாதன், டத்தோ டி.ராஜகோபாலு  உள்ளிட்ட பல தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
அதே வேளையில், மலேசிய இந்திய ஒருங்கிணைப்பு கழகம் அவரின் உருவப் படத்தை எரித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சுல்கிப்ளி விமர்சனத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment