20/03/2013

வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு அரைமணி நேர இலவச இணையம்! பிரதமரின் புதிய திட்டம்....


கோலாலம்பூர், மார்ச் 19- நாட்டின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வறுமை நிலையில் வாழும் மக்கள் இனி அரைமணிநேர இலவச இணைய வசதியை அனுபவிக்கலாம்.


இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தொலைத் தகவல், தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அணுக்கமாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
தெலிகோம் மலேசியாவிற்கு திடீர் அலுவல் வருகை புரிந்த போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும், தெலிகோம் மலேசியா நிர்வாகம் சார்பாக அதன் ஊழியர்கள் அனைவருக்கும் அரைமாத போனஸையும் பிரதமர் அறிவித்தார்.

No comments:

Post a Comment